iphone-ஐ பார்த்து இனி ஏங்காதீங்க.! Android பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்..

0 3152

மிகவும் காஸ்ட்லி மற்றும் இளைஞர்களின் கனவு ஸ்மார்ட் போன், ஆப்பிள் நிறுவனத்தின் iphone. உயர்பாதுகாப்பு அம்சங்கள் அடங்கியதாக கூறப்படும் iphone-ஐ, ஆண்ட்ராய்டு போனை காட்டிலும் எளிதாக Hack செய்ய முடிகிறது என வெளியாகியுள்ள தகவல் iphone பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எப்படியும் புதிதாக iphone வாங்கி விடவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தால், அதை பரிசீலிக்கும் நேரம் இது. தற்போதய காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போன்களின் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது அனைவரும் அறிந்ததே. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட் போன்களை காட்டிலும், iOS இயங்குதளம் பயன்படுத்தப்படும் iphone மாடல்கள் தான் மிகவும் பாதுகாப்பானது, Hack செய்ய கடினமான ஒன்று என கூறப்பட்டது.

ஆனால் சமீப காலமாக iphone-களை Hack செய்வதை காட்டிலும் ஆண்ட்ராய்டு போன்களை Hack செய்வது கடினமாக உள்ளது என அமெரிக்காவை சேர்ந்த துப்பறியும் மற்றும் தடயவியல் நிபுணரான Rex Kiser என்பவர் கூறியுள்ளார். 

அமெரிக்காவை பொறுத்தவரை நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக தீவிரவாதிகள் மற்றும் சந்தேக நபர்களின் Smart Phone-களை Hack செய்து தரவுகளை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் பல முக்கிய வழக்குகள் மற்றும் விசாரணைகளில் Hack செய்யப்படும் தகவல்கள் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்துகின்றன.

ஃபோர்ட் வொர்த் காவல் துறைக்கு டிஜிட்டல் தடயவியல் பரிசோதனைகளை நடத்தும் டிடெக்ட்டிவ் Rex Kiser கூறுகையில், கடந்த ஒரு வருடங்களுக்கு முன் வரை iphone சாதனங்களை எளிதாக Hack செய்ய முடியாது. ஆண்ட்ராய்டு போன்களை அசால்ட்டாக Hack செய்வோம். ஆனால் சமீபகாலமாக இந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என கூறி அதிர வைத்துள்ளார் Rex Kiser.

முன்பு எல்லா ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் உள்நுழைந்து தரவுகளை கண்காணிப்போம். இப்போது அப்படி செய்ய முடியவில்லை. குறிப்பாக கூகுள் பிக்சல் 2 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 9 போன்ற சாதனங்களிலிருந்து எந்த ஒரு தரவையும் ஹேக் செய்ய முடியவில்லை. அதுவும் Huawei p20 pro மொபைலை பொறுத்தவரை, Hack செய்ய பயன்படுத்தும் cracking software-க்கு சின்ன நூல் கூட கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு எங்களால் குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு சாதனங்களை Hack செய்ய முடியாது என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். iphone-களை Hack செய்வதை காட்டிலும், ஆண்ட்ராய்டு சாதனங்களை Hack செய்ய நீண்ட நேரம் பிடிக்கும் என்று வேண்டுமானால் சொல்லலாம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments