மகளின் நிச்சயதார்த்த அறிவிப்பு - வியப்புடன் வாழ்த்து தெரிவித்த பில்கேட்ஸ்

0 2765

பில்கேட்சின் மகள் ஜெனிபர் கேட்ஸ் தனது நிச்சயதார்த்தம் குறித்து அறிவித்துள்ளதற்கு, அவரது தந்தை பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய பணக்காரரான பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா தம்பதியரின் மகள் ஜெனிபர் கேட்ஸ், குதிரையேற்ற வீரரான நயல் நாசர் என்பவரை காதலித்துவந்தார்.

image

இந்நிலையில் இருவரும் நிச்சயதார்த்தம் செய்ய இருப்பதாக ஜெனிபர் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவிட்டார்.

">

அவரது பதிவுக்கு லைக்குகளும், வாழ்த்துகளும் குவிந்து வரும் நிலையில், தந்தை பில்கேட்சும், தாய் மெலிண்டாவும் மகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் இச்செய்தி கேட்டு வியப்படைந்ததாகவும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

சிகாகோவில் பிறந்து குவைத்தில் வளர்ந்தவரான நயல் நாசர், எகிப்து சார்பில் 2020 ஒலிம்பிக்கில் குதிரையேற்ற போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments