குரூப் 2ஏ தேர்வு முறைகேடு புகார் குறித்து போலீஸ் விசாரணைக்கு டிஎன்பிஎஸ்சி பரிந்துரை...

0 880

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு புகார்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் டிஎன்பிஎஸ்சி உரிய ஆவணங்களை அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் காவல்துறை விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவற்றை கவனத்துடன் ஆராய்ந்ததில் தவறுகள் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், இத்தேர்வு குறித்து விரிவான குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, உரிய ஆவணங்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

அதேசமயம், மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் எவ்வித ஐயப்பாடும் எழவில்லை என்றும், ஒருங்கிணைந்த வேளாண் பொறியாளர் பணித் தேர்வு முடிவுகளில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்றும் டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.

2019ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சிக்கிய 39 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு, தேர்ச்சி பெற்றோரின் புதிய பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

முதல் 100 இடங்களுக்குள் முறைகேடாக தேர்ச்சி பெற்றிருந்த 39 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு, நேர்மையான முறையில் தேர்வு எழுதி, அடுத்தடுத்த இடங்களில் இருந்தவர்களை சேர்த்து புதிய தேர்ச்சி பெற்றோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 1 முதல் 7 ஆம் தேதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்புக்கான ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யுமாறு அவர்களை டிஎன்பிஎஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments