24 ஆண்டுகளாக போலீசுக்கு தண்ணி காட்டிய குற்றவாளி, தந்தையின் இறுதிச்சடங்கில் சிக்கினான்
ஓட்டுனர் கொலை வழக்கில், ஜாமீனில் வந்து தலைமறைவான கொலையாளி 24 வருடங்களுக்கு பின், தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த போது போலீசில் சிக்கினான்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தைச் சேர்ந்தவர் சாகுல் அமீது. கடந்த 1996 ம் ஆண்டு ஜான்சன், குப்பன், சீனிவாசன் ஆகியோர் இவரது காரை வாடகைக்கு எடுத்து, சென்னை திருவொற்றியூரில் கொள்ளையடித்து அதே காரில் திரும்பும் போது சாகுல் அமீதை கழுத்தை நெரித்து கொன்று திருவள்ளூரை அடுத்த பட்டரைப்பெரும்புதூர் அருகே சடலத்தை வீசி சென்றனர்.
இதில் மூவரும் கைதான நிலையில், ஜாமீனில் வந்த ஜான்சன் தலைமறைவானான். இந்நிலையில் நேற்று தூத்துக்குடி கருங்குளம் கிராமத்தில் தந்தையின் இறுதிச்சடங்கிற்கு வந்த ஜான்சனை, ரகசிய தகவலின் பேரில் திருவள்ளூர் தாலுக்கா போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Comments