உலகிலேயே நீளமான பாம்பு எது ? அனகோண்டா இல்லை.. இது தான்
திரைப்படங்களில் பார்த்த பின் தான் அமேசான் காடுகளில் மட்டுமே இருக்கும், அனகோண்டா பாம்புகளை பற்றி பலருக்கும் தெரியும். அனகோண்டா பாம்புகளின் உருவத்தை பார்த்து உலகின் மிக நீளமான பாம்பு இது தான் என நினைக்கலாம்.
ஆனால் நிஜத்தில் Reticulated Python எனப்படும் ராஜமலைப்பாம்பு தான் உலகிலேயே மிகவும் நீளமானது. இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இந்த வகை ராஜமலைப்பாம்புகள் வசிக்கின்றன. பார்ப்பதற்கு பிரமாண்டமாக உள்ள அனகோண்டா பாம்புகளின் நீளம் 20 அடிக்கு மேல் இருப்பதில்லை.
ஆனால் ராஜமலைப்பாம்புகளோ 20 அடிக்கும் மேல் நீளம் கொண்டவை. எடை அதிகபட்சம் 75 கிலோ வரை இருக்கின்றன இந்த ராஜமலைப்பாம்புகள். கருப்பு தோல் மீது மஞ்சள் கலந்த பழுப்பு நிற வட்ட வடிவ புள்ளிகளை கொண்டிருக்கின்றன இவ்வகை பாம்புகள். கோழி, பூனை, வாத்து, நாய் உள்ளிட்டவை இதன் உணவு பட்டியலில் இருக்கின்றன.
Comments