சீனாவில் இருக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதை உறுதிப்படுத்தக் கோரிக்கை

0 687

சீனாவில் இருக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதை உறுதிப்படுத்தக் கோரும் வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பணி, கல்வி உள்ளிட்ட காரணங்களால் சீனாவில் இருக்கும் தமிழர்கள் அவரவர் குடும்பங்களைத் தொடர்பு கொண்டு கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் சுகாதார அவசரநிலை மற்றும் தனிமைக் கட்டுப்பாட்டு வாய்ப்புகளால் அங்கிருக்கும் தமிழர்கள் உணவு, போக்குவரத்து வசதியின்றி சிரமத்திற்கு ஆளாவர் என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் தமிழர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும் கோரப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 18-க்கு ஒத்திவைத்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments