கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்..?

0 7816

கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், அறிகுறிகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சுகாதாரத்துறை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலை ஏற்படுத்தக் கூடிய வைரஸ் கிருமி. சீனாவின் வூகான் நகரத்தில் இருந்து கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இது விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

காய்ச்சல், இருமல், சளி, உடல் சோர்வு மற்றும் மூச்சுத் திணறல் போன்றவை கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள். இந்த அறிகுறிகள் உள்ள நபர் இருமும்போதும், தும்மும்போதும் வெளிப்படும் நீர்த் திவலைகள் மூலம் கொரோனா வைரஸ் நேரடியாக பரவுகிறது.

இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும், கிருமிகளை உடைய நீர்த்திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும்பொழுது கைகள் மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவுகிறது

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க, தினமும் 10 முதல் 15 முறை கைகளை சோப்பு போட்டு, நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இருமும்போதும், தும்மும்போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை கொண்டு மூடிக் கொள்ள வேண்டும். சிகிச்சை தரும் அனைத்து மருத்துவமனைகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாக துடைத்து பராமரித்தல் வேண்டும்.

சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும். பாதிப்புகள் இருந்தால் இளநீர், ஓஆர்எஸ், கஞ்சி போன்ற நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்களை பருகுதல் வேண்டும். கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்புள்ள சீனாவுக்கு பயணம் செல்வதை தவிர்க்கலாம்.

இருமல், சளி, ஜலதோஷம் உள்ளவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதையும் விழாக்களில் பங்குபெறுவதையும் தவிர்க்க வேண்டும்.

சமீபத்தில் சீனாவுக்கு பயணம் சென்று வந்தவர்கள், இருமல், சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று ஆலோசனை பெற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. உதவி தேவைப்படுவோருக்கு 24 மணி நேர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments