அமெரிக்கா - மெக்சிகோ எல்லையருகே மிக நீளமான கடத்தல் சுரங்கம் கண்டுபிடிப்பு
அமெரிக்கா - மெக்சிகோ எல்லையருகே இதுவரை இல்லாத அளவு மிக நீளமான போதைப் பொருள் கடத்தல் சுரங்கம் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக 2014ல் 2,966 அடி நீள சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது 70 அடி ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ள சுரங்கத்தின் நீளம் 4,309 அடியாக கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் 5.5 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டுள்ளது. மெக்சிகோவின் திஜுவானா பகுதியிலிருந்து, சாண்டியாகோவின் தென்மேற்கு எல்லை வரை நீளும் இச்சுரங்கத்திற்கு அமெரிக்காவுக்குள் வெளியேறும் பகுதி இல்லை.
மேலும் இழுவை வண்டி, உயர் மின்னழுத்தம் கொண்ட மின்சார ஒயர்கள், கழிவுநீர்அமைப்பு, காற்றோட்ட வசதி, நுழைவாயிலில் மின்தூக்கி உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. இப்பகுதியில் எவ்வித போதை பொருள்களும் கண்டறியப்படாததோடு, யாரும் கைது செய்யப்படவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments