பெயரையும் இயக்கத்தையும் பதிவு செய்கிறார் பருவமாற்ற போராளி கிரேட்டா

0 1268

பூமி வெப்பமயமாதலை எதிர்த்து போராடும் பதின்பருவ போராளியான கிரேட்டா தன்பெர்க் (Greta Thunberg ) தனது பெயரையும், இயக்கத்தின் பெயரான Fridays For Future என்பதையும் காப்புரிமை கோரி பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பருவமாற்ற கேடுகளை தடுக்க வலியுறுத்தி கடந்த 2018 ல் சுவீடன் நாடாளுமன்றத்திற்கு வெளியே. தனி ஆளாக தாம் ஏந்தி நின்ற பதாகையின் School Stike for Climate என்ற வாசகத்தையும் பதிவு செய்வதாக கிரேட்டா இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார்.

தமது ஒப்புதல் இன்றி, பணம் சம்பாதிக்கும் நோக்கில் பலர் தமது பெயரை தவறாகப் பயன்படுத்துவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments