நள்ளிரவில் வீடு இடிந்து விழுந்ததில் சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு

0 1020

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே 40 ஆண்டுகள் பழமையான வீடு நள்ளிரவில் இடிந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னையில் பணியாற்றும் பாஸ்கரன் என்பவரின் வீடு பொதுவக்குடி கிராமத்தில் உள்ளது. அங்கு அவரது மனைவி ரேகா, 10 வயது மகன் ஜெகதீஷ்வரன் மற்றும் 8 வயது மகன் விகாஷ் ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நள்ளிரவில் வீட்டின் சுவர் மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த விகாஷ் மற்றும் ஜெகதீஷ்வரன் இருவரும் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த ரேகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 40 ஆண்டுகள் பழமையான அந்த வீடு முறையாகப் பராமரிக்கப்படாமல் பழுதடைந்த காரணத்தால் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments