குறைந்தது காய்கறிகள் விலை ..!
கோயம்பேடு சந்தையில் கடந்த மாதம் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்யப்பட்ட வெங்காயம், தற்போது விலை குறைந்து கிலோ 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வடமாநிலங்களில் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டதை அடுத்து வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்த வெங்காயம், கடந்த மாதம் வரை கிலோ 200 ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் வெங்காயம் மட்டுமின்றி, மற்ற காய்கறிகளின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால், ஒரு கிலோ வெங்காயம் குறைந்தபட்சமாக 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் பீன்ஸ், பீட்ரூட், முள்ளங்கி, முட்டை கோஸ், உருளைகிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது. வரும் காலங்களில் மேலும் விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
காய்கறிகள் விலை குறைந்தது
இன்றைய விலை நிலவரம் :
வெங்காயம் ரூ.12
சாம்பார் வெங்காயம் ரூ.60
உருளைகிழங்கு ரூ.16
பீன்ஸ் ரூ.18
பீட்ரூட் ரூ.8
முள்ளங்கி ரூ.10
முட்டை கோஸ் ரூ.13
அவரைக்காய். ரூ.35
Comments