IBM நிறுவன புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்தியர் நியமனம்

0 1203

பிரபல அமெரிக்க ஐ.டி. நிறுவனமான ஐ.பி.எம்.(IBM) ன் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்தியரான அரவிந்த் கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎம் நிறுவனத்தில் 40 ஆண்டுகள் பணியாற்றி தற்போது தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் விர்ஜினியா ரோமெட்டி (Virginia Rometty) பணி ஓய்வு பெற உள்ளார்.

இதை அடுத்து வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி அந்த பொறுப்பை ஏற்க உள்ள அரவிந்த் கிருஷ்ணா இப்போது ஐபிஎம்-ன் சீனியர் வைஸ் பிரசிடன்டாக இருக்கிறார். மைக்ரோசாப்ட் தலைவர் சத்ய நாதெள்ள, (Satya Nadella) கூகுள் மற்றும் ஆல்ப பெட் (Google and Alphabet) தலைவர் சுந்தர் பிச்சை, (Sundar Pichai) மாஸ்டர்கார்டு தலைவர் அஜய் பங்கா, (Ajay Banga) அடோப் (Adobe) சி.இ.ஓ.சாந்தனு நாராயணன் (Shantanu Narayen) , பெப்சி முன்னாள் தலைவர் இந்திரா நூயி (Indra Nooyi ) ஆகியோரின் வரிசையில் மீண்டும் ஒரு இந்தியர் பிரம்மாண்டமான நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments