திமிங்கல சுறாவை மீண்டும் கடலில் விட்ட கேரள மீனவர்கள்

0 1742

கேரள மீனவர்கள் சிலர் தங்களது வலையில் பிடிபட்ட அரியவகை திமிங்கல சுறா மீனை (Whale Shark ) மீண்டும் கடலில் விட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

image

கடலில் உள்ள திமிங்கல சுறாக்கள் 40 அடி நீளம் வரை வளரும் தன்மை கொண்டவை. இந்த வகை சுறா ஒன்று, கோழிக்கோடு கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் அண்மையில் சிக்கியது. உடலில் வெள்ளை நிற புள்ளிகளுடன் காணப்படும் அந்த மீன், அரியவகை உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அதை மீண்டும் கடலிலேயே மீனவர்கள் விட்டனர்.அப்போது எடுக்கப்பட்ட வீடியோ, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இன்சீசன் பிஸ் (InSeason Fish) எனும் குழுவினரால் சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வைரலாக பரவி வரும் அந்த வீடியோவை கடந்த 2 நாள்களில் மட்டும் 30 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments