92 ஆயிரம் ஊழியர்கள் இன்று விருப்ப ஓய்வு..!

0 1440

நாட்டில் முதல்முறையாக ஒரே நாளில் அரசுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களிலிருந்து 92 ஆயிரம் ஊழியர்கள், அதிகாரிகள் இன்று விருப்ப ஓய்வு பெறுகின்றனர்.

இவர்களில் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்திலிருந்து மட்டும் 78 ஆயிரத்து 569 பேர் ஓய்வு பெறவுள்ளனர். நாடு முழுவதுமுள்ள பிஎஸ்என்எல் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து ,53,ஆயிரத்து 786 ஆகும்.

இந்தப் பெரும் விருப்ப ஓய்வுக்குப் பிறகு இவர்களில் 75 ஆயிரத்து 217 பேர் மட்டுமே மிச்சமிருப்பார்கள். பாதிக்கும் அதிகமானோர், அதாவது சுமார் 51 சதவிகிதம் ஊழியர்கள் பணியிலிருந்து விலகுகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments