ஜாமியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கியுடன் பாய்ந்த நபர் - கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு அமித் ஷா உத்தரவு

0 576

டெல்லியின் ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராம் பகத் என்ற பெயரில் முகநூல் கணக்கில் மத துவேஷத்தை பிரதிபலிக்கும் பதிவை வெளியிட்ட அந்த நபர் அடுத்த சில மணி நேரங்களில் சிஏஏக்கு எதிரான ஜாமியா பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தில் கலந்துக் கொண்டான்.

அப்போது, திடீரென துப்பாக்கியை எடுத்து மாணவர்களை நோக்கி சுடத் தொடங்கினான். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. பல மணி நேர பரபரப்பிற்கு பின்னர் போலீசார் அவனை கைது செய்தனர்.

இச்சம்பவம் குறித்து அதிர்ச்சி வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார். இதுபோன்ற சம்பவங்களை சகித்துக் கொள்ள  முடியாது என்றும் குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும் அமித் ஷா எச்சரித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments