யானைகள் நலவாழ்வு முகாம் நிறைவு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் நடைபெற்ற யானைகள் நல வாழ்வு முகாம் இன்றுடன் நிறைவடைகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் பவானி ஆற்றுப்படுகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த 48 நாட்களாக நடைபெற்றது.
இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் பராமரிக்கப்படும் யானைகள் மற்றும் மடங்களுக்கு சொந்தமான யானைகள் என மொத்தம் 28 யானைகள் பங்கேற்றன. முகாமில் யானைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள், நடைப்பயிற்சி, மருத்துவ வசதி ஆற்றுநீரில் குளித்து மகிழ ஷவர்பாத் ஆகியவை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் இந்த முகாமினை காண பார்வையாளர்களை அனுமதிக்கும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கிடையில் இந்த பிரிவு யானைகளுக்கு மட்டுமல்ல ; தங்களுக்கும் தான் என யானைப்பாகன்கள் வருத்தம் தெரிவித்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி துவங்கிய யானைகள் முகாம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் யானைகள் சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
Comments