வறுமையின் பிடியில் ரெசிடென்ஸி ஓட்டல்...ரூ 75 லட்சம் வரி பாக்கி..! நடவடிக்கை எப்போது ?
சென்னையில் தினமும் கோடிகளை வாரி குவிக்கும் தியாகராயர் நகர் ரெசிடென்சி ஓட்டல் நிர்வாகத்தினர் சென்னை மாநகராட்சிக்கு 75 லட்சம் ரூபாய் வரிபாக்கி வைத்திருப்பதாக நோட்டீஸ் ஓட்டப்பட்டுள்ளது.
வறுமையின் பிடியில் சிக்கித்தவிப்பது போல மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல் பாக்கி வைத்த பின்னணி குறித்து விவரிக்கின்றது சென்னையில் குடியிருக்கும் நடுத்தரவர்க்கத்து மக்கள் வீடுகளுக்கு 600 ரூபாய் சொத்துவரி செலுத்தவில்லை என்றால் கூட அடுத்த நாளே குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பை துண்டிக்க மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்களை அனுப்பி வைத்து விடுவது வழக்கம்..!
ஆனால் சென்னையில் பிரமாண்டமாகவும் பிரபலமாகவும் உள்ள பல நிறுவனங்கள் முறையாக சொத்துவரியை செலுத்தாமல் மாநகராட்சிக்கு தண்ணிகாட்டி வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அந்தவகையில் சென்னை லயோலா கல்லூரி நிர்வாகம் கடந்த ஒரு ஆண்டுக்கு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியான 96 லட்சத்து 46 ஆயிரத்து 688 ரூபாயை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளதாக குறிப்பிட்டு அறிவுறுத்தல் நோட்டீஸ் ஒட்டினர்.அதேபோல வறுமையின் கோரப்பிடியில் சிக்கியது போல 75 லட்சம் ரூபாய் சொத்துவரியை செலுத்தமல் தவிர்க்கும் தியாகராய நகர் ரெசிடென்ஸி ஓட்டல் முன்பும் மாநகராட்சி அதிகாரிகள் வரிபாக்கி நினைவூட்டல் நோட்டீசை ஒட்டிச் சென்றனர்.
அரண்மனை போன்ற உள்லங்கார வேலையாடுகளுடன், நூற்றுக்கணக்கான படுக்கை அறைகளுடன் மசாஜ் செய்யும் ஸ்பா மற்றும் மது அருந்தும் பப்புடன் செழிப்பாக உள்ள ரெசிடென்சி ஓட்டலுக்கு தினமும் கோடிக்கணக்கில் வருமானம் குவியும் நிலையில், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 75 லட்சம் ரூபாய் என்பது ஒரு சிறு தொகை என்று சுட்டிகாட்டும் சமூக ஆர்வலர்கள்,
பெரிய நிறுவனங்கள் வரிபாக்கி வைத்திருந்தால் நோட்டீஸ் எல்லாம் ஒட்டி கால அவகாசம் வழங்கும் அதிகாரிகள், வரிகட்டாத நடுத்தர மக்களை வாட்டி எடுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
Comments