இந்திய அணியின் அசத்தல் வெற்றிகளுக்கு இந்த 3 தான் காரணம்.. பட்டியலிட்ட இன்சமாம்

0 2551

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் தொடர் வெற்றி பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணிக்கு, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் தொடர் வெற்றிக்கான காரணங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

இந்திய அணியில் இரு பெரிய வீரர்கள் உள்ளனர். ஒருவர் விராட் கோலி, மற்றொருவர் ரோஹித் சர்மா. இருவருமே பெரிய வீரர்கள். ஆனால் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் இரண்டு வீரர்களை மட்டும் வைத்து கொண்டு வெற்றி பெற இயலாது. அங்கு தான் மேலும் இரு திறமையான வீரர்களை இந்திய அணி முன்னிறுத்தியுள்ளது. அவர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் என கூறியுள்ளார் இன்சமாம். இந்த வீரர்கள் அணியின் மன உறுதியை வேறு ஒரு உயரமான கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.

இந்திய அணியின் பந்துவீச்சை கண்டு பதறுகின்றனர் எதிர் அணியினர். நம்பர் 1 பவுலரான பும்ரா மற்றும் ஷமி இருவருமே வேகமான மற்றும் துல்லிய பந்துவீச்சால் மிரட்டுகின்றனர். சுழற்பந்து வீச்சாளர்களும் நன்றாக பந்து வீசுகின்றனர்.

இந்திய அணி வெற்றி அணியாக திகழ மற்றுமொரு முக்கிய காரணம் கேப்டன் விராட் கோலியின் உடல்மொழி. அவரின் ஆக்ரோஷமான மற்றும் உணர்ச்சிமிக்க உடல்மொழி, அணியில் இருக்கும் மற்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட பெரிய ஊக்கமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments