"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
உருளைக்கிழங்கு பயிரிட்டு ரூ.25 கோடி வருமானம் ஈட்டி அசத்தியுள்ள விவசாயி
குஜராத்தை சேர்ந்த ஒரு விவசாய குடும்பத்தினர் உருளைக்கிழங்கை உற்பத்தி செய்து ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
ஆரவல்லி மாவட்ட சேர்ந்த ஜிதேஷ் படேல், குடும்ப உறுப்பினர்கள் 10 பேருடன் இணைந்து லேடி ரொசட்டா என்ற ரகத்தை சேர்ந்த உருளைக்கிழங்கை ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டு வருகிறார்.
சிப்ஸ், பிஸ்கட் தயாரிக்க பயன்படுவதால், ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு கிலோ 17 ரூபாய் என்ற விலைக்கு விற்கப்படுவதால், ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதாக ஜிதேஷ் படேல் தெரிவித்தார். அவர் பயின்ற வேளாண் அறிவியல் படிப்பும் அதற்கு உதவியாக அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சம் டன் லேடி ரொசட்டா உருளைக்கிழங்கு இந்தோனேசியா, குவைத், ஒமன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments