போராட்டங்களுக்கு தடை உத்தரவை மக்களுக்கு ஏன் தெரியப்படுத்தவில்லை? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னையில் போராட்டங்கள் நடத்த தடை விதித்து பிறப்பித்த உத்தரவை மக்களுக்கு தெரிவிக்காதது ஏன் என, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜனவரி 13 முதல் 28 ஆம் தேதி வரை அனுமதியின்றி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த தடை விதித்து, சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதற்கு எதிரான மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, காவல் ஆணையரின் உத்தரவு மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்படிருப்பதாகவும், இதுகுறித்து மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை மாநகரம் முழுவதும் பொருந்தும் உத்தரவை மக்களுக்கு ஏன் தெரியப்படுத்தவில்லை என்றும், இணையதளத்தில் ஏன் வெளியிடவில்லை எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, வழக்கு விசாரணை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
Comments