டெஸ்லா நிறுவனர் சொத்து மதிப்பு ஒரு மணி நேரத்தில் 230 கோடி டாலர் உயர்வு
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரு மணி நேரத்தில் 230 கோடி டாலர் அதிகரித்தது.
மின்சார கார் தயாரிப்பில் முன்னோடியாக திகழும் அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லோ நிறுவனத்தின் பங்குகள் கடந்த அக்டோபர் முதல் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகின்றன. அந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 10 ஆயிரம் கோடி டாலரை தாண்டி விட்டது.
சிறப்பான நிதி நிலை முடிவுகளால் அமெரிக்க பங்குச்சந்தையில் டெஸ்லா நிறுவன பங்குகளின் விலை, ஒருமணி நேரத்தில் 12 சதவீதம் உயர்ந்து, 648 டாலராக அதிகரித்தது. அதன் காரணமாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 3600 கோடி டாலராக உயர்ந்தது.
டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் சுமார் 20 சதவீதம் எலான் வசம் உள்ளன. டெஸ்லா நிறுவனத்தின் அதிவேக வளர்ச்சியால், அதன் பங்கு 800 டாலராக விலை உயரும் என்று தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன.
Comments