சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துக்களை பதிவு செய்பவர்களை கண்டறிய உத்தரவு

0 1328

சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களை பதிவு செய்பவர்களை கண்டறிய, 2  மாதத்திற்குள் சிறப்பு பிரிவை அமைக்க வேண்டும் என தமிழக டி.ஜி.பி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக சில கருத்துகளை பதிவிட்டதால் கைது செய்யப்பட்டார். ஜாமீன் கேட்டு அவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி அமர்வில் ஏற்கெனவே  விசாரணைக்கு வந்தபோது, சமூக வலைதளங்களில் ஆபாச, அவதூறு கருத்துகளை தெரிவிப்பவர்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எந்த ஒரு முறையான நடைமுறையும் இல்லை என தெரிவித்தார்.

இத்தகைய போக்குகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காவிட்டால், தனி நபர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்த நீதிபதி, அவதூறு பரப்புவோர் மீது கருணை காட்ட முடியாது என குறிப்பிட்டார்.

சமூக வலைத்தளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களை பதிவு செய்பவர்களை கண்டறிய மாவட்ட மற்றும் மாநில அளவில் அனைத்து காவல்நிலையங்களிலும் 2  மாதத்திற்குள் சிறப்பு பிரிவை அமைக்க வேண்டும் என தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார். இதற்கான நிபுணத்துவத்தை சிறப்பு பிரிவில் பணியாற்றுபவர்களுக்கு ஏற்படுத்த உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மார்ச் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். தன்னுடைய பதிவுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால் மருதாசலத்துக்கு ஜாமீன் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments