திமுக MP தயாநிதி மாறன் மீது வழக்கு தொடரப்படும் : அமைச்சர் ஜெயக்குமார்

0 1246

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் தனக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டிய திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது வழக்கு தொடரவுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் இந்திய சர்வதேச கடற்பாசி கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தன் மீது குற்றம்சாட்டிய தயாநிதிமாறன்,நீதிமன்றத்தில் நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும் என்றார்.

image

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. சரியான பாதையில் விசாரணை நடத்தி வருவதாகவும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் ஜெயக்குமார் உறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments