நாடோடிகள் - 2 திரைப்படத்தை நாளை வெளியிட தடை
நடிகர் சசிக்குமார் நடிப்பில், நாளை வெளியாக இருந்த நாடோடிகள் - 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நந்தகுமார் தயாரித்துள்ள அந்த படத்திற்கு தடை விதிக்க கோரி எப்.எம்.பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், படத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உரிமையை அளிப்பதாக 5 கோடியே 25 லட்சம் ஒப்பந்தம் மேற்கொள்ளபட்ட நிலையில், வேறு நிறுவனம் மூலமாக படத்தை வெளியிட தயாரிப்பாளர் நடவடிக்கை எடுப்பதால் தடை வதிக்க கோரப்பட்டிருந்தது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்காக "கீ டெலிவரி மெசேஜ்" தர கியூப் நிறுவனத்திக்கு தடை விதித்து உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
Comments