2 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்பிள் மீண்டும் முதலிடம்
உலக அளவில் அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் 2 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடத்தை பிடித்துள்ளது.
கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் ((Counterpoint Research )) அமைப்பு 2019ம் ஆண்டின் 4ஆவது காலாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கையை மதிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை 7 கோடியே 29 லட்சம் எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்து முதலிடத்திலும், தென்கொரியாவின் சாம்சங் 7 கோடியே 9 லட்சம் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்து 2ஆவது இடத்திலும், சீனாவின் ஹூவாய் ((Huawei)) 5 கோடியே 6 லட்சம் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்து 3ஆவது இடத்திலும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. குறைந்த விலை ஐபோன் 11 சீரிஸ் போன்களை அதிகமாக ஏற்றுமதி செய்ததே ஆப்பிள் முதலிடத்தை பிடிக்க காரணம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments