குரங்குகளை பயமுறுத்த கரடி உடை அணிந்த கிராம மக்கள்
உத்தரபிரதேசத்தில் தொல்லை அளிக்கும் குரங்குகளை பயமுறுத்த கிராம மக்கள் கரடி உடை அணிந்தனர்.
அந்த மாநிலத்தின் சிக்கந்தர்பூர் கிராமத்தில், ஏராளமான குரங்குகள் உள்ளதாகவும்,அவற்றால் தினந்தோறும் தொல்லை ஏற்படுவதாகவும் கிராம மக்கள் கூறியுள்ளனர். கிராமத்து குழந்தைகளை குரங்குகள் குறிவைத்து தாக்குவதாகவும் கிராம மக்கள் புகார் கூறியுள்ளனர்.
வனத்துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நாடக நடிகர்களிடம் கரடி வேட உடைகளை வாடகைக்கு எடுத்த கிராம மக்கள், அதனை இருவருக்கு அணிவித்து பகல் நேரத்தில் தெரு, தெருவாக உலாவ விட்டனர்.
கரடி வேடதாரிகளை உண்மையான கரடிகள் என்று எண்ணி குரங்குகள் இப்போது தங்கள் சேட்டையை காட்டுவதில்லை என்றும், அவற்றின் தொல்லை ஒழிந்துள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
Comments