சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

0 675

சென்னையில் நாளை நடைபெறவுள்ள இலவச வேலை வாய்ப்பு முகாமிற்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில், சென்னை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் கலந்து கொள்ள சேவைக்கட்டணம் எதுவும் இல்லை. 8, 10,12 மற்றும் ஐடிஐ, டிப்ளோமோ படிப்போ அல்லது கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

25க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்யவுள்ள இந்த முகாமில், தகுதியுடையவர்கள் தவறாமல் பங்கேற்று பயனடையுமாறும் அறிவுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments