கணவர் மறைவால் குடும்பம் சிதைந்துவிட்டதாக கோப் பிரயண்ட் மனைவி வேதனை

0 901

கோப் பிரயண்ட் மறைவால் குடும்பம் முற்றிலும் சிதைந்துவிட்டதாக அவரது மனைவி வனெசா பிரயண்ட் வேதனை தெரிவித்துள்ளார்.

லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அண்மையில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட்டும், அவரது 13 வயது மகளும் உயிரிழந்தனர்.

அவரது மரணம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் கணவர் மற்றும் மகளின் மறைவு குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள கோப் பிரயண்ட்டின் மனைவி, தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த தந்தையாக விளங்கிய பிரயண்டின் மறைவால் குடும்பம் முற்றிலும் சிதைந்துவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும் மகள் கெயின்னா குறித்தும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். கெயின்னா பங்கேற்க இருந்த கூடைப்பந்தாட்டப் போட்டிக்காக சென்ற போது ஹெலிகாப்டர் விபத்து நேரிட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments