வெளிநாட்டு கிளப் அணியால் முதல்முறையாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இந்திய அணி வீராங்கனை

0 841

இந்திய கால்பந்து வீராங்கனைகளில் முதன்முறையாக மணிப்பூர் வீராங்கனை ஒருவர் வெளிநாட்டு கால்பந்து கிளப் அணியால் வர்த்தக ரீதியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இம்பால் அருகேவுள்ள அயர்ன்பாம் ((Irengbam)) கிராமத்தைச் சேர்ந்த அந்த வீராங்கனையின் பெயர் பாலாதேவி. ஸ்காட்லாந்தை சேர்ந்த ஸ்காட்லாந்து ஜெயின்ட்ஸ் ரேஞ்சர்ஸ் எப்.சி. ((Scottish giants Rangers FC)) எனும் கிளப் அணிக்கு 18 மாதங்கள் விளையாட அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு 10ம் எண் கொண்ட ஜெர்சி உடை அளிக்கப்பட்டது.
29 வயதாகும் பாலாதேவி, இந்திய மகளிர் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். இந்திய அணியிலும் 10ம் எண் கொண்ட ஜெர்சி உடையை அணிந்தே அவர் விளையாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments