மாத்திரை அட்டைகளில் கொடுக்கப்படும் வெற்று இடம் எதற்காக.?

0 19001

பொதுவாக ஆங்கில மருந்துகள் வாங்கும் போது அந்த மருந்து அட்டைகளில் காலியாக இடம் விடப்படாமல், எல்லாவற்றிலும் மாத்திரைகள் நிரப்பபட்டிருக்கும். சில மாத்திரை அட்டைகளில் Empty Block-குகள் இருக்கும் இதற்கான  காரணங்களாக கூறப்படும் சில தகவல்கள் குறித்து பார்க்கலாம்.

ஒரு சில மாத்திரை அட்டைகளில் மாத்திரைக்கான இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக விடப்பட்டிருக்கும். சில மாத்திரை அட்டைகளில் ஒன்றோ, இரண்டோ அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாத்திரைகளை கொடுத்துவிட்டு, மீதமுள்ள இடங்களில் மாத்திரை வடிவத்தில் வெற்று இடங்களை வைத்து விட்டு அதை மூடி இருப்பார்கள்.

நாம் பல முறை இந்த மாதிரியான மாத்திரை அட்டைகளை பார்த்திருந்தாலும், பெரிதாக அதை பற்றி கண்டுகொள்ளாமல் விட்டிருப்போம். கீழ்காணும் சில முக்கிய காரணங்களுக்காக இந்த மாதிரி மாத்திரை அட்டைகள் வடிவமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ரசாயன எதிர்வினையை தடுக்க:

இந்த மாதிரி மாத்திரை அட்டைகள் வடிவமைக்கப்படுவதற்கு சில காரணங்கள் உள்ளன . அதன்படி சில மாத்திரைகளை என்ன தான் அருகருகே அட்டையில் வைத்து அடைந்திருந்தாலும், அதில் வேதியல் மாற்றங்கள் நிகழ்ந்து வெளிவர வாய்ப்பு உள்ளது.

ஒரே மாத்திரைகள் தான் அருகருகே அடைக்கப்பட்டிருக்கும் என்றாலும் ஒன்றுடன் ஒன்று எதிர்பாரவிதமாக சேர்ந்து, வேதியல் மாற்றங்கள் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக அட்டைகளில் இடைவெளி விட்டே அடைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

image

இடப்பற்றாக்குறையை தவிர்க்க:

எல்லா மருந்து அட்டைகளுக்கு பின்னும் அந்த மருந்தின் பயன்கள், மூலப்பொருட்களின் விகிதாச்சாரம், தயாரிக்கப்பட்ட இடம், உற்பத்தியாளர் விவரங்கள் கண்டிப்பாக அச்சடிக்கபட வேண்டும் என்பது நிபந்தனை. அதற்காக இடப்பற்றாக்குறை ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக கூட சில மருந்து அட்டைகள் இப்படி வடிவமைக்கப்படுகின்றன.

சேதமாக கூடாது:

ஒரு சில மாத்திரைகளை உடைத்து சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் பாதிப்புகள் ஏற்படலாம். இந்த நிலையில் ஒரு Block-ல் ஒரே ஒரு மாத்திரையை மட்டும் வைத்து பேக் செய்தால், அந்த மாத்திரை வாடிக்கையாளர் கைக்கு வருவதற்குள் எளிதாக சேதமடைந்து உடைந்து விடலாம். எனவே அப்படி நடக்க கூடாது என்பதற்காக கூட சில நிறுவனங்கள் மேற்கண்ட வகையில் Empty Block-க்குகள் வைத்து மாத்திரை அட்டைகளை தயாரிப்பதாக தெரிகிறது.

இன்னும் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அட்டை பாக்ஸில் வைத்து, மாத்திரைகளை எடுத்து வரும்போது அது சேதமாகிவிடும் வாய்ப்பு அதிகம். இதை தவிர்க்கவே பெரும்பாலும் Empty Block-க்குகள் அடங்கிய மாத்திரை அட்டைகள் வெளியிடப்படுகிறது என்பது அனைவரும் ஏற்று கொள்ளகூடிய காரணமாக இருக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments