பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு 2017-ல் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்

0 690

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு 2017-ல் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முறைகேடு புகாரால் 2017-ம் ஆண்டு நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விளக்கக் குறிப்பில், மீண்டும் தேர்வு நடத்தப்படும் போது 2017 ஆம் ஆண்டு தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிட்டுள்ள ஆசிரியர் தேர்வு வாரியம், 2017 ஆம் தேர்வு எழுதியவர்கள் மீண்டும் 600 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments