முன்விரோதத்தால் பாஜக பிரமுகர் விஜயரகு கொலை - காவல்துறை ஆணையர்
முன்விரோதம் காரணமாகவே திருச்சி வரகனேரி பாஜக பிரமுகர் விஜயரகு கொலை நிகழ்ந்துள்ளதாக காவல்துறை ஆணையர் வரதராஜூ உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொலை குறித்து 5 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்த நிலையில் சென்னை போலீசார் உதவியுடன் மிட்டாய் பாபு மற்றும் அவரது நண்பர் ஹரி பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
லவ் ஜிகாத் விவகாரத்தில் விஜய ரகு கொல்லப்பட்டதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தனிப்பட்ட விரோதம் காரணமாக மட்டுமே கொலை நடந்துள்ளதாக காவல்துறை ஆணையர் வரதராஜூ விளக்கமளித்துள்ளார். ஆனால் என்ன மாதிரியான முன்விரோதம் என்று கூற அவர் மறுத்துவிட்டார்.
Comments