சிலிண்டருக்கான பணத்தை ஆன்லைனில் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள்

0 1326

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்துமாறு வாடிக்கையாளர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இண்டேன் எரிவாயு வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் குறுந்தகவலில் இருக்கும் லிங்க் மூலம் ஆன்லைன் முகவரியை திறந்து  நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இ-வாலெட் வழிமுறைகளில் தொகையை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிமுறையை வாடிக்கையாளர்கள் கையாளாத பட்சத்தில், சிலிண்டரை டெலிவரி செய்ய வரும் பணியாளரிடம், டிஜிட்டல் மூலம் பணம் பெறும்படி தெரிவித்து அதற்கான கருவியை கொண்டுவருமாறு கூறலாம் என்றும், சிலிண்டருக்கான தொகையை ரொக்கமாக அளிப்பதை  இறுதி வழியாக வைத்துக்கொள்ளலாம் என்றும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments