நாட்டாமை கொலை வழக்கில் புதிய தமிழகம் மாவட்டச் செயலாளர் உள்பட 10 பேர் கைது

0 1623

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஜான்பண்டியனை அழைத்து கொடியேற்றுவிழா நடத்திய முன்னாள் நாட்டாமை கொலை செய்யப்பட்டதையொட்டி, புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட 10 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தேசிகாபுரம் கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பான பிரச்சினையால், ஒரே சமூகத்தினர் இருபிரிவாக பிரிந்து, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியிலும், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியிலும் செயல்பட்டு வந்தனர்.

image

இதனிடையே முனிராஜ் என்பவர் த.ம.மு.க. நிறுவனர் ஜான் பாண்டியனை அழைத்து வந்து கொடியேற்றி விழா நடத்தியுள்ளார். அன்று இரவே அவரது தந்தை தங்கவேல் கொலைசெய்யப்பட்டார். இதையடுத்து இன்று புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜலிங்கம், குமார், ராமசாமி, சக்திவேல் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments