பேருந்து ஏறி பூங்காவுக்கு சென்று ஓய்வெடுத்து திரும்பும் நாய்

0 1096

அமெரிக்காவில் வளர்ப்பு நாய் ஒன்று நாள்தோறும் தனியாக பேருந்து ஏறி, பூங்காவுக்கு சென்று ஓய்வெடுத்து விட்டு திரும்பும் வீடியோ வைரலாகி வருகிறது.

சியாட்டிலை (Seattle) சேர்ந்த ஜெப் யங்க் (Jeff Young) என்பவரால் லேப்ரடார் இன கருப்பு நிற பெண் நாய் வளர்க்கப்படுகிறது. எக்லிப்ஸ் (Eclipse) எனும் அந்த நாய் வீட்டில் இருந்து கிளம்பி, பேருந்து ஏறி, அருகிலுள்ள பூங்கா சென்று ஓய்வெடுத்து திரும்புகிறது.

image

நாயின் கழுத்தில் பேருந்தில் பயணம் செய்வதற்கான பஸ் பாஸ் இணைக்கப்பட்டிருப்பதால் அதை யாரும் தடுப்பதில்லை. சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோவை சுமார் 3 லட்சம் முறை இதுவரை பார்வையிட்டுள்ளனர்.




SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments