பனிப்படலத்தில் சிக்கிக் கொண்ட 536 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

0 1167

ரஷ்யாவின் ஷாக்கலின்(Sakhalin) தீவு அருகே கடலில் உறைந்த பனிப்படலங்களில் சிக்கிக் கொண்ட 536 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ஓகோட்ஸ்க்(Okhotsk) கடல் உறைந்து பனிப்படலமாக காட்சியளிக்கிறது. இது எளிதில் உடைந்து விடும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

image

இந்த நிலையில் அபாயத்தை உணராமல் அதில் சுற்றித்திரிந்த மீனவர்கள், பனிப்படலங்கள் உடைந்ததால் ஆங்காங்கே சிக்கிக்கொண்டனர். அவர்களை 3 படகுகளில் சென்ற மீட்புப் படையினர் கயிறு உதவியுடன் மீட்டு கரைச் சேர்ந்தனர். மீட்கப்பட்டவர்களின் உடல் நிலை நன்றாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 




SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments