அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாக 3 இந்தியர்கள் கைது

0 707

அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாக 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நியூயார்க் மாநிலத்தில், அமெரிக்காவின் வடக்கு எல்லைக்கு அருகே அமைந்துள்ள மேசன்னா (Massena) நகரில், எல்லைப்பகுதி ரோந்து போலீசார் வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

அதில் இருந்த 2 பயணிகள் இந்தியர்கள் என்பதும், சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்ததும் கண்டறியப்பட்டதால் கைது செய்யப்பட்டனர். அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரும் இந்தியர் என்பதோடு, அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்ததால் நாட்டைவிட்டு வெளியேறுமாறு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டவர் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்புள்ள, ஆள்கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments