புகையான் நோய் தாக்கி கருகிய ஆந்திரா பொன்னி - விவசாயிகள் வேதனை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அறுவடைக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் ஆந்திரா வகை நெற்பயிர்களை புகையான் நோய் தாக்கி கருகியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கல்லாங்காட்டு வலசு, உப்பு பாளையம் பகுதியில், ஐ.ஆர் 20, சம்பா, பொன்னி மற்றும் பிபிடி எனப்படும் ஆந்திரா பொன்னி வகை நெற்பயிர்களை பயிரிட்டிருந்தனர். இதில் மற்ற வகை பயிர்கள் செழித்து வளர்ந்துள்ள நிலையில் ஆந்திரா பொன்னி பயிர்கள் மட்டும் குலைநோய் எனப்படும் புகையான் நோய் தாக்கியதால் அவை கருகி பாதிக்கப்பட்டுள்ளது.
அறுவடைக்கு ஒரு மாதமே உள்ள நிலையில், மீண்டும் மருந்து தெளித்த போதும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் நெற்கதிர்கள் பதராக இருப்பதாக தெரிவித்த விவசாயிகள், வங்கியில் கடன் பெற்று செலவு செய்ததாகவும், குறிப்பிட்ட வகை நெற்பயிர்கள் மட்டும் சேதம் அடைந்தது பற்றி வேளாண்துறையினர் ஆய்வு செய்வதுடன், அரசு கருணை அடிப்படையில் இழப்பீடு வழங்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
Comments