திருச்சி பாஜக பிரமுகர் படுகொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
திருச்சி பா.ஜ.க. பிரமுகர் கொலையில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலக்கரை மண்டல பா.ஜ.க. செயலாளராக இருந்த விஜயரகு திங்கட்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டார். லவ் ஜிகாத் விவகாரத்தில் விஜய ரகு கொல்லப்பட்டதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விஜய் ரகு குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் மிட்டாய்பாபுவும் ஹரிபிரசாத்தும் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சச்சின் என்கிற சஞ்சய், முகமது யாசர், சுடர் வேந்தன் ஆகிய மூவரும் திருச்சி சஞ்சீவி நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments