உலகின் போக்குவரத்து நெரிசல்மிக்க நகரம் எது தெரியுமா..?

0 1983

உலகிலேயே மோசமாக போக்குவரத்து நெரிசல் மிக்க நகரம் என்ற பெயரை பெங்களூரு நகரம் பெற்றுள்ளது.

டாம் டாம் டிராபிக் இன்டக்ஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. 57 நாடுகளில் 416 நகரங்களில் போக்குவரத்து நெரிசல் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன் முடிவுகளின் படி தென்னிந்திய நகரங்களில் உள்ள வாகன ஓட்டுநர்கள் பயண நேரத்தில் சராசரியாக 71 விழுக்காடு கூடுதல் நேரம் செலவழிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பெங்களூரில் உள்ள வாகன ஓட்டிகள் ஆண்டுக்கு 243 மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பெங்களூருவைப் போலவே மும்பை, புனே மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களும் இந்திய அளவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்களாக அறியப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments