கோவை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு

0 1209

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் 25 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சீனா சென்று திரும்பிய கோவையைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு குறித்து சோதனை செய்யப்பட்டு, பாதிப்பு இல்லை என்று கண்டறியப்பட்டது. இருப்பினும் அவர்கள் தொடர்ந்து சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்காக அமைக்கப்பட்டுள்ள வார்டில், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த வார்டில் அனைத்து விதமான சிறப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments