ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கால் இறுதிப் போட்டியில் ரஃபேல் நடால் அதிர்ச்சி தோல்வி

0 906

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதிச் சுற்றில் முன்னணி வீரர் ரஃபேல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமை, தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நடால் எதிர்கொண்டார். 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போட்டியில் 7-6, 7-6, 4-6, 7-6 என்ற செட் கணக்கில் தீம் வெற்றி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ், முன்னாள் சாம்பியனான சுவிஸ் வீரர் வாவ்ரின்காவைத் 6-1, 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

இன்று நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரரும், செர்பியாவின் ஜோகோவிச்சும் மோதுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments