டிக்டாக்கிற்கு தடையா? புதுவை முதல்வர் பல்டி ..! பெண்கள் கூட்டத்தில் அட்வைஸ்

0 1156

தேசிய பெண்கள் ஆணைய நிகழ்ச்சியில் குடும்பபெண்களை சீரழிக்கும் டிக்டாக்கை ஒழிக்க வேண்டும் என்று முழங்கிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அடுத்த சில மணி நேரங்களில் டிக்டாக்கிற்கு தன்னால் தடை விதிக்க முடியாது என்று கூறி அந்தர் பல்டி அடித்துள்ளார்.

வேலை வெட்டிக்கு செல்லாமல் பொழுதை கழிப்போரை எல்லாம் ஒரு நடிகன் என்று நம்பவைக்கும் நவீன வைரஸ் டிக்டாக்..! இந்த செயலியை தங்கள் செல்போனில் வைத்துக் கொண்டு சில நடிகையர் திலகங்கள் செய்யும் அலப்பறைகளுக்கு அளவே இல்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன

டிக்டாக் வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் தங்களை நாட்டிய சூறாவளியாக நினைத்துக் கொண்டு வீட்டுக்குள் ஆட்டம் போட்டு பலரும் பார்க்க வீடியோ பதிவிட்டு பகிரங்கப்படுத்துவதை வாடிக்கையாக செய்து வருகின்றனர்.

இன்னும் சிலபெண்களை தெருவில் நின்று குத்தட்டம் போடும் நிலைக்கு இழுத்து வந்து விட்டுள்ளது இந்த டிக்டாக் வைரஸ்..!

இதற்கெல்லம் உச்ச கட்டமாக, அய்யா...சாமி... ஏதாவது லைக் இருந்தா போடுங்கய்யா..! என்று யாசகம் கேட்கும் நிலைக்கு சில பெண்களை தள்ளியுள்ளது இந்த டிக்டாக் விஷக் கிருமி..!

டிக்டாக் செயலி கொரோனா வைரசை விட கொடிய வைரஸாக பெண்கள் மத்தியில் பரவி பல குடும்பங்களை சீரழித்து வருவது குறித்து, தேசிய பெண்கள் ஆணையத்தின் கருந்தரங்கில் விவாதிக்கப்பட்டது. புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயண சாமி டிக்டாக்கை ஒழிக்க வேண்டும் என்று தனது கண்டன குரலை ஆவேசமாக பதிவு செய்தார்

மதியம் நடந்த கருத்தரங்கில் பெண்கள் மத்தியில் டிக்டாக்கிற்கு எதிராக ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் நாராயண சாமியிடம் , புதுச்சேரியிலாவது டிக்டாக்கிற்கு தடைவிதிக்கப்படுமா ? என்று கேள்வி முன்வைக்கப்பட்டது, அதற்கு அவர், டிக்டாக்கிற்கு தடை விதிக்க இயலாது என்று கூறியதோடு அதனை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று தான் கூறியதாக அந்தர்பல்டி அடித்தார்.

குழந்தைகள் ஆபாச படத்தை பார்ப்பவர்களை கைது செய்ய எடுத்த நடவடிக்கை போல, டிக்டாக்கினால் நிகழும் சீரழிவுகளை ஆராய்ந்து உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments