கலங்கரை விளக்கம் - பட்டினம்பாக்கம் வரை நடைபாதை அமைப்பது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் லூப் சாலை வரை நடைபாதை அமைப்பது தொடர்பாக, மத்திய அரசு அறிக்கை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணையில், நடைபாதை அமைக்கும் திட்டம் தொடர்பான மாநகராட்சியின் விண்ணப்பத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாக, கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்தது.
இதையடுத்து, மெரினாவை உலகத்தரமிக்கதாக மாற்றும் நோக்கம், எந்த வகையிலும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய பரிந்துரை மீதான நிலைப்பாட்டை, மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் 6 வாரத்தில் அறிக்கையாக தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
Comments