டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலுக்கு இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தகுதி
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறியும் போட்டிக்கு இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார் .
இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரான நீரஜ் சோப்ரா, தென்ஆப்பிரிக்காவின் போட்செப்ஸ்ட்ரூமில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்றார். அப்போது 87.86 மீட்டர் தூரம் அளவிற்கு ஈட்டி எறிந்தார். இதன் மூலம் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வேண்டுமென்றால் 85 மீட்டருக்கு குறையாமல் ஈட்டி எறிய வேண்டும் என்ற நிலையில் 87.86 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து, நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார்.
Comments