கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் 2,000 கிளைகளை மூடிய Starbucks
கொரோனா வைரஸ் பீதியால் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் சீனாவில் தனது 2 ஆயிரம் கிளைகளை மூடியுள்ளது.
அமெரிக்க கார்பரேட் நிறுவனமான ஸ்டார்பக்ஸ், சீனாவில் 4 ஆயிரத்து 292 கிளைகளை இயக்கி வந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 50 சதவீத கடைகளை மூடியுள்ளது.
நோய் பரவலை தடுக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலும் பொது சுகாதாரத்தை கருத்தில் கொண்டும் தனது கடைகளை மூடியுள்ளதாக ஸ்டார்பக்ஸ் விளக்கம் அளித்துள்ள நிலையில், பங்கு சந்தையில் அந்த நிறுவனம் படு வீழ்ச்சியை கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments