என் ஷாட்டை காப்பியடிக்கும் இளைஞர்கள்.! ட்விட்டரில் சாஹல் சேட்டை

0 1067

இந்திய கிரிக்கெட் வீரரும், சுழற்பந்து வீச்சாளருமான சாஹல் நகைச்சுவை உணர்வு கொண்டவர். தன்னை தானே அதாவது தனக்கு பேட்டிங் திறமை இருப்பது போன்றோ அல்லது தான் பேட்டிங்கில் திணறுவதை வைத்தோ நகைச்சுவை செய்து கொள்வார். இந்நிலையில் ட்விட்டரில் அவர் பதிவிட்ட நகைச்சுவை போஸ்ட் ஒன்று வைரலாகியுள்ளது. 

அணியினருடன் இருக்கையில் அவ்வப்போது சேட்டை செய்து அதை சமூகவலைத்தளங்களில் வெளியிடுவார் சாஹல். போட்டிகளின் போது மிகவும் சீரியசாக பந்து வீசும் சாஹல், போட்டி முடிந்த பின்னர் வீரர்களை பேட்டி எடுப்பது, அவர்களை செமையாக கலாய்ப்பது, வீரர்கள் தங்கும் அறையில் ஆடி பாடுவது என எதாவது செய்து கொண்டே இருப்பார்.

image

இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தனது பேட்டிங் ஷாட்டை காப்பியடிப்பதாக ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ட்ரோல் செய்துள்ளார். அதில் கோலி மற்றும் கே.எல்.ராகுல் பேக் ஷாட் அடிக்கும் புகைப்படத்துடன், பயிற்சியின் போது தாம் அதே போல ஷாட் அடிக்கும் போஸ் குடுத்த புகைப்படத்தை இணைத்து ட்விட்டரில் ட்ரோல் செய்துள்ளார் சாஹல்.

அத்துடன் அவர்கள் இருவரும் எனது ஷாட்டை காபி அடிக்கிறார்கள் , எனினும் மோசமாக இல்லை இளைஞர்களே தொடருங்கள் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments