நாளை நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தலை முழுக்கவனம் செலுத்தி நடத்த அறிவுறுத்தல்
நாளை நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தலை முழுக்கவனம் செலுத்தி நடத்த வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 335 பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் தவறாமல் வாக்களிக்க அறிவுறுத்தியுள்ள தேர்தல் ஆணையம், மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி, ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
மறைமுக தேர்தலை முழுமையாக வீடியோ பதிவு செய்வதுடன் போதிய பாதுகாப்பு வசதிகளையும் செய்து, தயாராக இருக்கவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
Comments