ஆர்.கே நகர் பணப்பட்டுவாடா வழக்கில் சிபிஐ-யை எதிர்மனுதாரராக சேர்க்க திமுகவிற்கு அனுமதி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக சிபிஐ விசாரணை கோரும் வழக்கில், சிபிஐயை எதிர்மனுதாரராக சேர்க்க திமுகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது.
கடந்த 2017-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இடைதேர்தல், பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பணப்பட்டுவாடாவை தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தொடர்ந்த வழக்கில், சிபிஐ விசாரணை கோரி திருத்தம் செய்ய அவர் அனுமதி கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கையை ஏற்றது. தொடர்ந்து, ஆர்.கே.நகர் பணபட்டுவாடா தொடர்பான பிரதான வழக்கு வரும் பிப்ரவரி 11-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments