ஐஓடி ( Internet of things ) என்றால் என்ன.? எளிய விளக்கம்

0 3489

தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் சமீபத்தில் பரவலாக தொழில்நுட்ப உலகில் உச்சரிக்கப்படும் வார்த்தை Internet Of Things எனப்படும் ஐஓடி (IoT).

ஐஓடி என்றால் என்ன என்று பலருக்கும் நிறைய குழப்பங்கள் இருக்கும். எளிமையாக புரியும்படி சொன்னால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் எந்த பொருள் எல்லாம் இன்டர்நெட்டுடன் கனெக்ட் ஆகுமோ, சென்சர்களுடன் கனெக்ட் ஆகுமோ அதுவே ஐஓடி ஆகும்.

image

அன்றாடம் பயன்படுத்துபவை:

எங்கோ இருந்து கொண்டு நமது டிவைஸ் மூலம் பிற பொருட்களை மானிட்டர் செய்ய முடிவதும் Internet Of Things-ல் அடங்கும்.நாம் பயன்படுத்தும் மொபைல், கணினி, வாட்ச் என இணையவசதி இருக்கும் அனைத்து பொருட்களும் Internet Of Things தான்.

இணைய சேவை:

பொதுவாக நாம் எப்படி இணைய சேவையை பயன்படுத்துகிறோம்.நாம் பயன்படுத்தும் ஒரு டிவைசானது ஒரு நெட்வொர்க்குடன் இணைந்திருக்கும். இப்படி நம் கையில் இருக்கும் பொருள் நெட்வொர்க்குடன் இணைவதால் நமக்கு தேவையானவற்றை இணையதளம் வழியே செய்து கொள்ள முடிகிறது.

ஸ்மார்ட் வாட்ச்:

உதாரணமாக நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் வாட்ச் மூலம் நமது பிட்னெஸை கண்காணித்து கொள்கிறோம். எவ்வளவு தூரம் நடந்தோம், ஓடினோம், எவ்வளவு கலோரிகள் செலவாகியது உள்ளிட்ட பல தகவல்களை பெறுகிறோம். இவ்வளவு தகவல்களை பெற நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் வாட்ச்சில் ஒரு நெட்வொர்க் கனெக்ட் ஆகியுள்ளது. அதில் சென்சாரும் உள்ளது. இதே போல நாம் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள சென்சார்கள் இன்டர்நெட்டுடன் கனெக்ட் ஆகி இருந்தால் அவையும் ஐஓடி தான்.

image

ஸ்மார்ட் சூப்பர் மார்கெட்:

அதே போல ஸ்மார்ட் சூப்பர் மார்கெட்டுகளும் வந்துவிட்டன. பொருட்களை கூடையில் எடுத்து வைக்கும் போதே பார்கோட் ஸ்கேன் ஆகி விலையை சொல்லிவிடும். இதனால் நீங்கள் பில்லிங் செக்ஷனில் கால் கடுக்க நிற்க தேவை இல்லை. அதே போல கூடையில் போட்ட பொருள் தேவை இல்லை எனில், அதை எடுத்துவிட்டால் மொத்த விலையில் இருந்து, வேண்டாம் என்று முடிவு செய்த பொருளின் விலை கழிக்கப்பட்டுவிடும்.அதேற்கேற்றவாறு அந்த கூடையில் சென்சார் உள்ளது. இப்போது இந்த கூடை கூட ஒரு ஐஓடி தான்.

image

ஸ்மார்ட் ஹோம் அப்ளையன்ஸ்:

அதே போல ஸ்மார்ட் ஹோம் உபகரணங்கள். நாம் வேறு ஒரு இடத்தில இருந்து கொண்டே வீட்டில் உள்ள டிவி, ஏசி, உள்ளிட்ட பொருட்களை ஆன் அல்லது ஆஃப் செய்வது, வாஷிங் மெஷின் இருந்தால் அதற்கு அடுத்து கட்டளை இடுவது என ரிமோட் மூலம் செய்வது என சென்சார் மூலம் அவை இன்டர்நெட்டில் கனெக்ட் செய்யப்பட்டிருந்தால் அவையும் ஐஓடி.

smart city, smart agriculture, smart healthcare, smart devices என ஏகப்பட்டவை மூலம் அன்றாடம் Internet Of Things-ஐ நாம் பயன்படுத்தி வருகிறோம். எனவே இன்டர்நெட் மற்றும் சென்சார்களுடன் கனெக்ட் அனைத்துமே Internet Of Things என்பதை குழப்பமே இல்லாமல் புரிந்து கொள்ளுங்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments